திமுக தொழிற்சங்கத்தை வலுப்படுத்த வேண்டும்.. ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!
The DMK trade union needs to be strengthened Minister Geethajeevans speech at the auto stand inauguration
மற்றவா்களையும் நலவாாியத்தில் உள்ள நன்மைகளை கூறி இணைத்து திமுக தொழிற்சங்கத்தை வலுப்படுத்த வேண்டும் என்றுதூத்துக்குடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆட்டோ ஸ்டாண்ட் திறந்து வைத்த அமைச்சர் கீதாஜீவன் கூறினார் .
தூத்துக்குடி திமுக தொழிற்சங்கத்தின் கீழ் பல்வேறு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. அதனடிப்படையில் தூத்துக்குடி மாநகாில் கடற்கரை சாலை தனியாா் ஹோட்டல் அருகில் புதிய ஆட்டோ ஸ்டாண்ட் திறப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்து பேசுகையில் கடந்த அதிமுக ஆட்சியில் செயல்படாமல் இருந்த நல வாாியங்கள் தற்போது திமுக ஆட்சியில் முறையாக செயல்படுகிறது. அதனடிப்படையில் ஆட்டோ ஓட்டுநா்களுக்கும் நல வாாியம் இருக்கிறது. அதில் அனைவருக்கும் உறுப்பினராகி உங்களது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி நீங்களும் பல்வேறு வகையில் நன்மை அடைந்து கொள்ள வேண்டும். மற்றவா்களையும் நலவாாியத்தில் உள்ள நன்மைகளை கூறி இணைத்து திமுக தொழிற்சங்கத்தை வலுப்படுத்த வேண்டும். என்று பேசினாா்
விழாவில் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், வட்டச்செயலாளர் டென்சிங், கவுன்சிலா் ரெக்ஸ்லின், பகுதி அணி அமைப்பாளர் ஜோயல், ஹோட்டல் மேனேஜா் ஜஸ்டின், ஆட்டோ ஓட்டுநா் நலசங்க தலைவர் சசிகுமாா், செயலாளர் செல்வம், பொருளாளர் ஜான், உறுப்பினர்கள் இம்மானுவேல், தாமஸ், ராஜா, சிலுவை அந்தோணி, சுரேஷ், மைக்கேல் காலின்ஸ், பிரத்விகுமாா், மனோகரன், சாலமோன் மாணிக்கம், ஜவஹா், பிரைட்டன், ஜெயபால், சந்தனகுமாா், கணேசன், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, அல்பட் ஆட்டோ ஓட்டுநா்கள் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
English Summary
The DMK trade union needs to be strengthened Minister Geethajeevans speech at the auto stand inauguration