ஆந்திராவில் அதிர்ச்சி குற்றச்சாட்டு: “சந்திரபாபு – ராகுல் காந்தி ரகசிய பேச்சு” – ஜெகன் மோகன் ரெட்டி குற்றம், லோகேஷ் மறுப்பு - Seithipunal
Seithipunal


ஆந்திரப் பிரதேச அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி, முதல்வர் சந்திரபாபு நாயுடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியுடன் ரகசியமாக தொடர்பில் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

சமீபத்தில், நாடு முழுவதும் பரபரப்பை கிளப்பிய வகையில் ராகுல் காந்தி, லோக்சபா தேர்தலில் “வாக்கு திருட்டு” நடந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து, ஜெகன் மோகன் ரெட்டி, “சந்திரபாபு நாயுடு, தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி மூலமாக ராகுல் காந்தியுடன் தொடர்பில் உள்ளார். அதனால் தான் ஆந்திராவில் நடக்கும் அட்டூழியங்கள் குறித்து ராகுல் காந்தி மௌனமாக இருக்கிறார்” என்று கடுமையாக விமர்சித்தார்.

மேலும், வாக்கு எண்ணிக்கையின்போது 12.5% வாக்கு சதவீத வேறுபாடு இருந்ததாகவும், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வியடைந்தது குறித்து ராகுல் காந்தி ஏன் பேசவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கு டிடிபி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான நாரா லோகேஷ் திட்வட்டமாக மறுப்பு தெரிவித்தார். “எங்களுக்கு ஒரே தொடர்பு – ஆந்திர மக்களுடன்தான். ஜெகன் தனது தோல்விக்குப் காரணமாக வாக்கு திருட்டு சாக்கை காட்டுகிறார். ஊழலால் சோர்வடைந்த மக்கள் அவரை நிராகரித்துவிட்டார்கள். இப்போது மோடி மற்றும் நாயுடுவின் தலைமையில் இரட்டை எஞ்சின் ஆட்சி ஆந்திராவை முன்னேற்றும்” என்று அவர் ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.இந்த குற்றச்சாட்டு – மறுப்பு பரிமாற்றம் ஆந்திர அரசியலில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking allegation in Andhra Pradesh Chandrababu Rahul Gandhi secret talks Jagan Mohan Reddy accusation Lokesh denie


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->