தங்கையின் நிலையை கண்டு ஆத்திரமடைந்த அண்ணன்...! கத்தி குத்து வாங்கிய போக்சோ கைதி...!
Brother furious at sisters condition POCSO person stabbed knife
விருதுநகர் சிவகாசியில் மீனம்பட்டியை சேர்ந்த 32 வயது சுமன் என்பவர் சிறுநீர் கல்லடைப்பு காரணமாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக தனது உறவினரான மூதாட்டியின் வீட்டில் தங்கியிருந்தார்.

அங்கு இரட்டையர்களான 16 வயதுடைய சிறுமிகள் மூதாட்டியின் பாதுகாப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் அங்கு சுமன் சம்பவத்தன்று இரவு வீட்டில் சிறுமிகள் தூங்கி கொண்டிருந்தபோது, இருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அப்போது சிறுமிகள் கத்தியவதால் அவர் அங்கிருந்து ஓட்டம்பிடித்தார்.இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான சிறுமி ஒருவர் விஷம் குடித்தார். பிறகு அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக சிறுமிகளின் பாட்டி அனைத்து மகளிர் காவலில் புகாரளித்தார். அதனடிப்படையில்,காவலர்கள் போக்சோ வழக்குப்பதிவு செய்து சுமனை வலைவீசி தேடி வந்தனர்.
இதனிடையே,நேற்று முன்தினம் சிறுமிகளின் உடன் பிறந்த சகோதரரான 19 வயது வாலிபர் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது சுமனை கண்ட அவர் ஆத்திரமடைந்து,அவரை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடினார்.இதில் படுகாயமடைந்த சுமன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து மதிச்சியம் காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.
English Summary
Brother furious at sisters condition POCSO person stabbed knife