டிசம்பர் மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகள் நிலைமை சரியாகிவிடும்...! - டிடிவி தினகரன் திட்டவட்டம் - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டத்தில் நேற்று துணை பொதுச்செயலாளர் மாணிக்கராஜா தலைமையில் ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.அங்கு மாவட்ட செயலாளர் சந்தோஷ் குமார் வரவேற்றார். இந்தக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பங்கேற்று, 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

இதற்கு முன்னதாக டி.டி.வி. தினகரன் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தப்போது தெரிவித்ததாவது,"கடந்த 7 மாதமாக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் அ.ம.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்து வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறோம். தேசிய ஜனநாயக கூட்டணியில் ஓ.பன்னீர்செல்வம் இருக்கிறார்.

எங்களுடன் ஓ.பன்னீர்செல்வம் தொடர்பில் இருக்கிறார்.பா.ஜ.க. தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சியினரை பலப்படுத்தி வருகின்றனர். டிசம்பர் மாத இறுதிக்குள் கூட்டணி கட்சிகள் நிலைமை சரியாகிவிடும்.மேலும், தி.மு.க.வை வீழ்த்துவது தேசிய ஜனநாயக கூட்டணியின் லட்சியம்.

இதற்காக அமித்ஷா கடுமையாக உழைக்கிறார். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெற்று யாரை முதலமைச்சராக அறிவிக்கிறார்களோ அவர்களை நாங்கள் ஏற்று கொள்வோம்.கடந்த நான்கரை ஆண்டுகளாக தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருக்கிறது.

2026-ம் ஆண்டு தேர்தலில் அ.ம.மு.க. கால் பதிக்கும். இந்த தேர்தலில் தமிழ்நாட்டில் 4 முனை போட்டி ஏற்படும்.நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை கேட்டு பெறுவோம். வரும் ஜனவரி மாதத்திற்குள் தேசிய ஜனநாயக கூட்டணியிலுள்ள குளறுபடிகள் பேசி சரி செய்யப்படும். திருமாவளவன் கடந்த ஓராண்டாக குழப்பத்தில் இருக்கிறார்.

மேலும், விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளில் தொடர் வெடி விபத்துகளால் உயிர் பலி அதிகரித்து வருகிறது. அதிகாரிகள் உயிர்ப்பலிகளை தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.இது தற்போது அரசியல் வட்டாரங்களில் பெருமளவில் பெரு பொருளாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

situation coalition parties resolved by end December TTV Dhinakarans plan


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->