பரபரப்பில் அதிமுகவினர்! நூலிழையில் தப்பிய இபிஎஸ்..! அலங்கார வளைவு சரிந்து விழுந்ததால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை:
அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி தனது மாநிலமெங்கும் நடைபெறும் “மக்களைக் காப்போம் – தமிழகத்தை மீட்போம்” பிரச்சாரப் பயணத்தின் போது பெரும் விபத்தைத் தப்பினார்.

இன்று (திங்கள்) திருவண்ணாமலை மாவட்டத்தில் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டிருந்த எடப்பாடி பழனிசாமி தனது பிரச்சார பேருந்தில் பயணம் செய்து வந்தார். அவரை வரவேற்க பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த ஆர்ச், அவரது வாகனம் கடக்கும்முன் திடீரென சாலையில் சரிந்து விழுந்தது.

நூலிழையில் எடப்பாடி பழனிசாமி பேருந்து பாதிப்பின்றி தப்பியது. ஆனால் பின்னால் வந்த பல வாகனங்கள் மீது ஆர்ச் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கார்களில் சிக்கிய ஆர்ச் விரைவாக அகற்றப்பட்டதால் பின்னர் வாகனங்கள் இயல்பாக நகரத் தொடங்கின.

இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதால், சம்பவம் பெரும் கவனம் பெற்றுள்ளது. பெரிய அளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது என்பதில் உள்ளூர்வாசிகள் நிம்மதி அடைந்தனர்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK in a state of panic EPS narrowly escaped A commotion as the decorative arch collapsed


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->