யுபிஐயில் பெரிய மாற்றம்: UPI பண பரிவர்த்தனையில் புதிய மாற்றம்.! இனிமேல் இந்த வசதி கிடையாது.!
Big change in UPI New change in UPI money transactions This facility will no longer be available
நாட்டில் கோடிக்கணக்கான யுபிஐ (UPI) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 1 முதல் நபருக்கு நபர் (P2P) 'கோரிக்கை வைத்து பெறும்' (Collect Request) வசதி முழுமையாக நிறுத்தப்பட உள்ளது என தேசிய பணப்பரிமாற்ற கழகம் (NPCI) அறிவித்துள்ளது.
இந்த முடிவு, டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாப்பாக்கும் நோக்கத்துடனும், அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளைத் தடுக்கவும் எடுக்கப்பட்டதாக NPCI தெரிவித்துள்ளது.
என்ன மாற்றம்?
இத்தடை நபருக்கு நபர் (P2P) 'கோரிக்கை வைத்து பெறும்' பரிமாற்றங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
நண்பர்கள், குடும்பத்தினருக்கு யுபிஐ ஐடி அல்லது க்யூஆர் குறியீடு மூலம் பணம் அனுப்புவது வழக்கம்போல செயல்படும்.
வணிகர்கள் அல்லது சரிபார்க்கப்பட்ட நிறுவனங்களுக்கு யுபிஐ மூலம் பணம் செலுத்துவதும் தொடரும்.
தற்போது ஒரு பரிவர்த்தனையில் அதிகபட்சம் ரூ.2,000 வரை 'கோரிக்கை வைத்து பெறும்' வசதி உண்டு; அது இனி செயல்படாது.
ஏன் நிறுத்தம்?
NPCI புள்ளிவிவரங்களின்படி, யுபிஐ பரிமாற்றங்கள் கடந்த சில ஆண்டுகளில் மிக வேகமாக அதிகரித்துள்ளன. ஆனால் அதே நேரத்தில் யுபிஐ மோசடி வழக்குகளும் அதிகரித்துள்ளன. இதனால் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், வணிகர்களுக்கான KYC விதிகளை NPCI கடுமையாக்க திட்டமிட்டுள்ளது.
வெளிநாட்டினருக்கான புதிய சேவை
இதற்கிடையில், "மோனி" (Moni) என்ற யுபிஐ அடிப்படையிலான மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்மார்ட் பேமெண்ட் சொல்யூஷன்ஸ் நிறுவனம் இதை வெளியிட்டுள்ளது.
இந்திய வங்கி கணக்கு இல்லாத வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் என்ஆர்ஐக்கள் (NRIs) இப்போது மோனி செயலியின் மூலம் இந்தியாவில் உள்ளூர் கடைகள், உணவகங்கள், சில்லறை விற்பனைக் கடைகளில் QR குறியீடு ஸ்கேன் செய்து பணம் செலுத்த முடியும்.இது "யுபிஐ ஒன் வேர்ல்ட் திட்டம்" அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றங்கள், இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் யுபிஐயின் முக்கியத்துவத்தையும், பாதுகாப்பை வலுப்படுத்தும் அரசின் முயற்சியையும் வெளிப்படுத்துகின்றன.
English Summary
Big change in UPI New change in UPI money transactions This facility will no longer be available