படை வீட்டம்மன் கோவில் கும்பாபிஷேகம்..எதிர்க்கட்சித் தலைவர் சிவா சாமி தரிசனம் !
The consecration of the temple of Padai Veetthamman Opposition party leader Siva Samis visit
வில்லியனூர் கொம்யூன் பெரியபேட் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ படை வீட்டம்மன் மற்றும் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக விழாவில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்.
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் கொம்யூன் பெரியபேட் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகர், ஸ்ரீ படை வீட்டம்மன் மற்றும் ஸ்ரீ எல்லை மாரியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக 1–ஆம் தேதி கணபதி வேள்வியுடன் தொடங்கியது. நேற்று புற்று மண் எடுத்து காப்பு அணிவித்தல் நிகழ்ச்சியும், இன்று காலை கோபூஜை, யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு காலை 8.30 மணிக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடைபெற்றது. தொடர்ந்து 5 ஆயிரம் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்த விழாவில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தார்.இதில், நித்தியா பேக்கேஜ் நிறுவன மேலாண் இயக்குநர் தாமோதரன், பெரியபேட் ஊர் முக்கியஸ்தர்கள் அரகிருஷ்ணன், கோவிந்தசாமி, அஞ்சாபுலி, தயாளன், கதிரவன், தமிழ்மணி, ஜெயப்பிரகாஷ், வேல்முருகன், செல்வம், புவி, பாக்கியராஜ் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
English Summary
The consecration of the temple of Padai Veetthamman Opposition party leader Siva Samis visit