ஈரான் போர் தாக்கம்: பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! மொத்தமா முடிய போகுது!பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை!
Impact of Iran War India is in big trouble It going to end completely Economists warn
ஈரான் – இஸ்ரேல் மோதல் காரணமாக உலகளவில் எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படலாம் என்ற அச்சத்தில், இந்தியாவில் எல்பிஜி கேஸ், பெட்ரோல் மற்றும் டீசல் விலை, தட்டுப்பாடு குறித்து தற்போது அதிகமாக பேசப்படுகிறது. ஆனால் இதைவிட பெரிய பொருளாதார சிக்கல் விரைவில் உருவாகலாம் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அவர்களின் கணிப்பின்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு (Foreign Exchange Reserves) தான் அடுத்த கட்டத்தில் மிகப்பெரிய சவாலாக மாறக்கூடும்.
முன்பு இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை ரூபாய் பரிவர்த்தனையில் வாங்கி வந்தது. ஆனால் அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக அந்த நடைமுறை குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் வளைகுடா நாடுகளிடமிருந்து அமெரிக்க டாலரில் எண்ணெய் வாங்கும் நிலை அதிகரித்துள்ளது.
தற்போது இந்தியாவிடம் சுமார் 700 பில்லியன் டாலர் அளவிலான அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளது. இந்த தொகை தற்போதைய இறக்குமதி தேவையை கணக்கில் எடுத்தால் 7 முதல் 8 மாதங்களுக்கு மட்டுமே போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் அந்நிய செலாவணி வருவாயில் முக்கிய பங்கு வகிப்பது ஏற்றுமதிதான். ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழ்நிலைகள் அதற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் 15–18% வரை வளைகுடா நாடுகளுக்கே செல்கிறது. இந்த நாடுகளுக்கு செல்லும் கடல் வழி முக்கியமாக ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் உள்ளது. ஈரான் – அமெரிக்கா மோதல் காரணமாக அந்த கடல் பாதை பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா விதித்துள்ள வரி மற்றும் வர்த்தக கட்டுப்பாடுகள் காரணமாகவும் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தற்போதைய வர்த்தக நிலவரப்படி
இதனால் 94 பில்லியன் டாலர் வர்த்தக பற்றாக்குறை உள்ளது. இந்திய ஏற்றுமதியில் சுமார் 18% அமெரிக்க சந்தையை நம்பி உள்ளது. ஆனால் வரி பிரச்சினைகள் காரணமாக அந்த வர்த்தகத்தில் சுமார் 40% வரை பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
ஈரான் போர், உலக வர்த்தக பதற்றம் மற்றும் ஏற்றுமதி குறைவு ஆகியவை இணைந்து இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதனால் வரும் மாதங்களில் இந்த பிரச்சனை மேலும் தீவிரமடையலாம் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
Impact of Iran War India is in big trouble It going to end completely Economists warn