தனியார் மருத்துவமனையில் முதல்வருக்கு நுரையீரல் பரிசோதனை..!
The Chief Minister underwent a lung test at a private hospital
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு நுரையீரல் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், நேற்று இந்த பரிசோதனை நடந்துள்ளது.
உடல் பரிசோதனைக்காக, ஸ்டாலின் நேற்று காலை, 9:00 மணிக்கு, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு நுரையீரல் செயல்பாடு தொடர்பான நவீன பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
அத்துடன் அவருக்கு சி.டி., ஸ்கேன் பரிசோதனையும் நடந்துள்ளது. உடல் பரிசோதனைகள் முடிந்து, முதல்வர் அங்கிருந்து 10:00 மணிக்கு புறப்பட்டு, நேரடியாக தலைமைச் செயலகம் சென்றுள்ளார். மேலும், அங்கு நடந்த நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார். இந்த பரிசோதனைகள் பற்றி கூறுகையில், இது வழக்கமான பரிசோதனை தான் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
English Summary
The Chief Minister underwent a lung test at a private hospital