3 மாதங்களில் 2-வது சம்பவம்; ஒடிசா கல்வி மையத்தில் என்ன நடக்கிறது?
Second incident in 3 months What is happening at the Odisha Education Centre?
நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் செயல்பட்டுவரும் கலிங்கா தொழிலக தொழில்நுட்ப மையத்தில் நேபாள நாட்டை சேர்ந்த மாணவி ஒருவர் தங்கி படித்துவருகிறார் . நேபாளத்தின் பீர்குஞ்ச் பகுதியை சேர்ந்த அவர், கணினி அறிவியல் படிப்பை படித்து வந்துள்ளார். இந்தநிலையில் அங்குள்ள பெண்கள் விடுதியில் தங்கி படித்து வந்த அந்த மாணவி நேற்று மாலை மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி இந்தியாவில் உள்ள நேபாள தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அந்த மாணவியின் பெற்றோர் இன்று புவனேஸ்வர் நகருக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது .பி.டெக் மூன்றாம் ஆண்டு படிப்பை படித்து வந்த நேபாள மாணவி விடுதி அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை தற்கொலைக்கு தூண்டினார் என கூறி கல்வி மையத்தின் மாணவர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக 5 பேர் மீதும் வழக்கு பதிவானது.
இதேபோல கடந்த ஏப்ரலில், மேற்கு வங்காளத்தின் பான்குரா பகுதியை சேர்ந்த அர்னாப் முகர்ஜி என்ற கே.ஐ.ஐ.டி. பல்கலைக்கழக மாணவர் புவனேஸ்வரில் மன்சேஸ்வர் பகுதியில் கட்டிடம் ஒன்றில் மர்ம மரணம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.3 மாதங்களில் 2-வது சம்பவம்.
English Summary
Second incident in 3 months What is happening at the Odisha Education Centre?