ஆற்காடு நகராட்சியில் அவசரக் கூட்டம்..பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்!
Emergency meeting in Arcot municipality Various resolutions passed
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு நகராட்சியின் அவசரகூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ராணிப்பேட்டை மாவட்டம்,ஆற்காடு நகராட்சியின் அவசரகூட்டம் நகர மன்ற தலைவர் தேவி பென்ஸ்பாண்டியன் தலைமையில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அரங்கில் நடந்தது.இதில் ஆணையாளர் வெங்கட்டலட்சுமணன் முன்னிலை வகித்தார்.
ஆற்காடு பஸ் நிலையத்தில் நகராட்சி சார்பில் கட்டப்பட்டு விரைவில் திறக்கப்பட உள்ள நவீன கட்டண கழிப்பிடத்தில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்க கூடாது. அப்படி வசூலித்தால் அந்த டெண்டரை ரத்து செய்ய வேண்டும். மேலும் கட்டணம் குறித்து பலகையில் எழுதி வைக்க வேண்டும் என்று திமுக கவுன்சிலர் பொன். ராஜசேகர் வலியுறுத்தி பேசினார்.
அதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் புதியதாக கட்டப்பட்டு வரும் ஆற்காடு பஸ் நிலையத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க அனுமதி கேட்டு தனியார் சார்பில் கடிதம் அளித்துள்ளதை ஏற்று அனுமதி அளிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் நகர மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
English Summary
Emergency meeting in Arcot municipality Various resolutions passed