தனுஷ் வெளியிட்ட ரஷ்மிகாவின் மைசா படத்தின் ஃபர்ஸ்ட் லுக்...! - Seithipunal
Seithipunal


பிரபல நடிகை 'ராஷ்மிகா மந்தனா' அவர்கள், தமிழ் , தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் பல நட்சத்திர நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் தனுஷ் நடித்த 'குபேரா' திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இத்திரைப்படம் வசூலில் ரூ.100 கோடியை கடந்து வெற்றி நடைப்போட்டு வருகிறது.இந்நிலையில் நடிகை ராஷ்மிகா அடுத்ததாக கதாநாயகியை மையமாக இருக்கும் ஒரு கதைக்களத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்திற்கு மைசா என தலைப்பு வைத்துள்ளனர். மேலும் இப்படத்தை அறிமுக இயக்குநரான ரவிந்திர புல்லே இயக்குகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் தனுஷ் அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.மேலும், இப்படத்தை அறிமுக தயாரிப்பு நிறுவனமான அன்ஃபார்முலா பிலிம்ஸ் தயாரிக்கிறது. படத்தின் பிற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dhanush releases first look of Rashmikas film mysaa


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->