அரபு ஜோதிடத்தின் மூலம் குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி கற்பை சூறையாடிய ஜோதிட ஆசாமி: தலைமறைவான நிலையில் கைது..!
Astrologer arrested for seducing and raping women by promising to solve family problems through Arabic astrology
குடும்பத்தில் நிலவும் பிரச்சினைகளை அரபி ஜோதிடம் முறையில் தீர்ப்பதாக கூறி பெண்களை மயக்கி வீட்டுக்கு வரவழைத்து, பாலியல் பலாத்காரம் மற்றும் பணம் நகைகளை பறித்துள்ள ஜோதிட ஆசை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கேரளா, பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த 45 வயதான யூசப் அலி என்பவர் ஜோதிடராக உள்ளார். இவர் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், கஷ்டங்கள் ஜோதிடம் முறையில் தீர்க்கப்படும் என்று கூறி வந்த நிலையில், அதனை நம்பிய ஒரு பெண், அவரை தொடர்பு கொண்டுள்ளார்.
அதன் பின்னர் அந்த பெண்ணை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். இந்த ஜோதிட ஆசாமி. அங்கு வைத்து குறித்த பெண்ணுக்கு ஜோதிடம் பார்ப்பதாக கூறி யூசப் அலி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன், கடந்த 22-ந் தேதி திருச்சூர் மாவட்டம் கீழ்த்தாணி பகுதியில் உள்ள ஜோதிட நிலையத்துக்கு அதே பெண்ணை வரவழைத்து மீண்டும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அந்த பெண் காட்டூர் போலீசில் புகார் கொடுத்த நிலையில், போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. ஜோதிடம் பார்ப்பதாக கூறி யூசப் அலி, பல பெண்களை வரவழைத்து பாலியல் பலாத்காரம் மற்றும் தொல்லை கொடுத்து வந்தமை தெரியவந்துள்ளது.
இதேபோல கடந்த ஆண்டு தாழ்வு மனப்பான்மையை நீக்கி தருவதாக கூறிய இந்த நபர், அந்த பெண்ணை நம்ப வைத்து ஜோதிட நிலையத்துக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து வெளியில் யாரிடமும் தெரிவிக்கக்கூடாது என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், ஒரு பெண்ணின் கையில் உள்ள விஷத்தை நீக்குவதாக கூறி அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளதோடு, அவரிடம் இருந்து 08 பவுன் நகை, ரூ.1½ லட்சத்தை பறித்து உள்ளதாக பகீர் தகவலும் வெளிவந்துள்ளது.

இவ்வாறு குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக ஜோதிடம் பார்க்க வரும் பெண்களிடம் அவர்களது கை, நெற்றியில் ஒரு திரவத்தை வைத்துள்ளார். பின்னர் அந்த திரவத்தை மூக்கால் நுகர செய்தவுடன், பெண்கள் மயங்கி உள்ளனர்.
அதன் பின்னர் அவர்களை யூசப் அலி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளமை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து சில பெண்கள் புகார் அளித்து உள்ள நிலையில், திருச்சூரில் தலைமறைவாக இருந்த யூசப் அலியை போலீசார் கைது செய்துள்ளனர்.ர
English Summary
Astrologer arrested for seducing and raping women by promising to solve family problems through Arabic astrology