திருமண ஆசைவார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர்..குடும்பத்தினர் மீது வழக்கு!
A young man made a girl pregnant by promising marriage Case filed against family members
இளம்பெண்ணை காதலித்து திருமண ஆசைவார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. குறிப்பாக சொல்லப் போனால் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு ஆனது அளிக்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் மாணவிகளை பாலியல் சீண்டலில் ஈடுபடுத்துவது போன்ற குற்ற செயல்களும் நடந்தேறி வருகிறது. அது மட்டுமல்லாமல் பள்ளி மாணவிகளை காதலிப்பதாக கூறி மாணவர்கள் அவர்களுடன் சுத்தி விட்டு அவர்களை ஏமாற்றி விடுவதும் நடந்து வருகிறது.இந்தநிலையில் திருமண ஆசைவார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜா கடந்த 2011-ம் ஆண்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. படித்து வந்த இளம்பெண்ணை காதலித்து வந்தார். 2013-ம் ஆண்டு அந்த இளம்பெண்ணை திருமணம் செய்வதாக கூறி, ஸ்ரீரங்கத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானதை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராஜாவிடம் வற்புறுத்தியுள்ளார்.
ஆனால் அவர் திருமணம் செய்ய வேண்டுமென்றால் கர்ப்பத்தை கலைக்க வேண்டும் என கூறி மாத்திரையை கொடுத்து கர்ப்பத்தை கலைத்துள்ளார். ஆனாலும் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ராஜா ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ராஜா, அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் மீது ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
English Summary
A young man made a girl pregnant by promising marriage Case filed against family members