மாதம்பட்டி ரங்கராஜ் வெளியீட்ட அறிக்கை! “Hello Husband, போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க” என ஜாய் கிரிஸில்டா பதிலடி! - Seithipunal
Seithipunal


ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா அளித்த புகாரால் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது எழுந்த சர்ச்சை தற்போது புதிய திருப்பத்தை எடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக மௌனமாக இருந்த ரங்கராஜ், நேற்று முதல் முறையாக அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால் அந்த அறிக்கை வெளிவந்தவுடனே, ஜாய் கிரிஸில்டா அதற்கும் பதிலடி கொடுத்துள்ளார் — இதனால் விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை காவல் ஆணையருக்கு அளித்த புகாரில் ஜாய் கிரிஸில்டா, “மாதம்பட்டி ரங்கராஜ் என்னை திருமணம் செய்து கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குற்றம் சாட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து ரங்கராஜிடம் போலீசார் விசாரணையும் நடத்தினர்.

நீண்ட நாட்களாக அமைதியாக இருந்த ரங்கராஜ், நேற்று வெளியிட்டிருந்த தனது அறிக்கையில்,“நீதித்துறை செயல்பாட்டில் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. இந்த விவகாரத்தில் நான் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். ஊடகங்களில் எந்தவொரு விவாதத்திலும் ஈடுபடவோ பதிலளிக்கவோ மாட்டேன். சட்டத்தின் வழியே உண்மை நிரூபிக்கப்படும்,”என்று கூறியிருந்தார்.

மேலும்,“ஜாய் கிரிஸில்டா எதிர்பார்ப்பது போல நீதிமன்றத்திற்கு வெளியே எந்த சமரசத்துக்கும் நான் தயார் இல்லை,”
என்று தெளிவாக குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கை வெளிவந்த சில மணி நேரங்களுக்குள், ஜாய் கிரிஸில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,“Hello Husband மாதம்பட்டி ரங்கராஜ், நீங்கள் முதலில் போலீஸ் ஸ்டேஷனுக்கு வாங்க… விசாரணைக்கு வாங்க… சட்டம் தன் கடமையைச் செய்யும்,”என்று எழுதியுள்ளார்.

இதனால் சமூக வலைதளங்களில் மீண்டும் விவாதம் வெடித்துள்ளது. ரசிகர்கள் “ரங்கராஜ் எதைச் செய்தாலும், ஜாய் உடனே பதிலடி கொடுக்கிறாரே!” என்று கூறி வருகின்றனர். சிலர் வடிவேலுவின் புகழ்பெற்ற வசனம் போல, “நீங்கள் தைரியமான ஆளாச்சே, வந்து பாருங்க!” என்று மீம்களாக கலாய்க்கத் தொடங்கியுள்ளனர்.

மொத்தத்தில், மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிஸில்டா சர்ச்சை இன்னும் தீவிரமாகி வருவதோடு, இது அடுத்த கட்டத்தில் நீதிமன்றத்தில் தொடரும் வாய்ப்பு மிகுந்ததாக தெரிகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhampatti Rangaraj release statement Joy Grisylda responds by saying Hello Husband take me to the police station


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->