சிம்புவின் ‘அரசன்’ ப்ரோமோ வெளியீடுவதில் சுற்றி சிக்கலா? – “மண்டைமேல இருந்த கொண்டையை மறந்துட்டாங்களே!” என்ற நெட்டிசன்களின் கிண்டல்!
Is there any problem with the release of Simbu Arasan promo Netizens tease You forgot the bangs on your head
நடிகர் சிம்பு தற்போது இயக்குநர் வெற்றிமாறன் உடன் இணைந்து ‘அரசன்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்க, இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார். ஆரம்பத்திலிருந்தே ரசிகர்களிடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள இந்த படம், வெற்றிமாறனின் பிரபலமான “வடசென்னை” யுனிவர்ஸுடன் தொடர்பு கொண்டதா என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
படத்தின் ப்ரோமோ நாளை தியேட்டர்களில் வெளியிடப்படவுள்ளது. அதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் யூடியூபில் வெளியிடும் திட்டத்தையும் படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் மிதந்தாலும், இதே நேரத்தில் நெட்டிசன்கள் “மண்டைமேல இருந்த கொண்டையை மறந்துட்டாங்களே!” என்று நகைச்சுவையாக கிண்டல் அடித்து வருகிறார்கள்.
அதற்குக் காரணம் என்னவெனில் — ப்ரோமோ தியேட்டர்களில் வெளியானவுடன் ரசிகர்கள் அதை தங்களது சமூக வலைதளங்களில் பகிர்வது தவிர்க்க முடியாதது. இதனால் ப்ரோமோ லீக் ஆகும் அபாயம் அதிகம் என்று நெட்டிசன்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அதாவது, ப்ரோமோ இணையத்தில் முன்பே பரவிவிட்டால், பின்னர் யூடியூபில் வெளியிடும் போது அதற்கான வியூஸ் குறையக்கூடும் என்பதே ரசிகர்களின் கவலை.
மேலும், ப்ரோமோவை தியேட்டரில் பார்க்க ₹15 கட்டணம் நிர்ணயம் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுவும் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ளது.
படக்குழு ப்ரோமோவை தமிழ்நாடு முழுவதும் சுமார் 15 முதல் 20 தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்துள்ளதுடன், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலும் தியேட்டர் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஏற்கனவே பலமுறை ப்ரோமோ வெளியீட்டு தேதிகள் மாற்றப்பட்ட நிலையில், இம்முறை “மிஸ் ஆகாது” என்று படக்குழு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
அனிருத் இசையமைப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில், சிம்பு நடிப்பில் உருவாகும் ‘அரசன்’ படம், வடசென்னை யுனிவர்ஸுடன் இணைந்திருக்கிறதா என்ற ரகசியம் ப்ரோமோ வெளியீட்டில் தெரியவருமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Is there any problem with the release of Simbu Arasan promo Netizens tease You forgot the bangs on your head