கிட்னிகள் ஜாக்கிரதை... சட்டமன்றத்திற்கு பேட்ஜ் அணிந்து வந்த அதிமுக உறுப்பினர்கள்!
TN Assembly ADMK Kitnikal jakirathai
தமிழக சட்டசபை 3வது நாள் அமர்வு இன்று சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது. அமர்வின் தொடக்கத்தில் வழக்கம்போல் வினா-விடை நேரம் நடைபெற்றது. இதில் எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
நேற்று நடைபெற்ற அமர்வில் கரூர் கூட்ட நெரிசல் விபத்து மற்றும் கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்பு பட்டை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர். இன்று அதற்கு தொடர்ச்சியாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் “கிட்னிகள் ஜாக்கிரதை” என எழுதப்பட்ட ஸ்டிக்கர்களை சட்டைகளில் ஒட்டி சபையில் பங்கேற்றனர்.
அதிமுகவினர், மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய கிட்னி திருட்டு விவகாரத்தை சட்டசபையில் விவாதிக்க வலியுறுத்தி, இதை முக்கியமாக எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.
English Summary
TN Assembly ADMK Kitnikal jakirathai