ரஷியாவை எச்சரித்த அமெரிக்க பாதுகாப்பு மந்திரி..சில மணிநேரத்தில் நடந்த பரபரப்பு!
US Secretary of Defense warned Russia thrilling events unfolded within a few hours
ரஷியாவை எச்சரித்த சில மணிநேரத்தில் அமெரிக்க பாதுகாப்பு மந்திரியின் விமானம் இங்கிலாந்தில் அவசர அவசரமாக தரையிறக்கம் செய்யப்பட்டதால் பரபரப்பு நிலவியது.
பிரஸ்ஸல்ஸ் நாட்டில் நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட அளவிலான கூட்டம் நடந்தது. இதில் அமெரிக்கா சார்பில் அதன் பாதுகாப்பு மந்திரி பீட் ஹெக்சேத் இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசும்போது, உக்ரைனுக்கு எதிராக போர் தொடுத்து வரும் ரஷியாவுக்கு கடும் கண்டனங்களை வெளியிட்டார்.
ரஷியாவின் தாக்குதல் தொடர்ந்தால், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் ஒன்றாக சேர்ந்து, ரஷியாவுக்கு எதிராக தடைகளை விதிக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்து பேசினார். இந்த நிலையில், நேட்டோ பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்று விட்டு அவர் நாடு திரும்பிய போது, அவர் பயணித்த விமானத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் முக்கிய பகுதியான முன்பக்க ஜன்னல் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, விமானம் உடனடியாக இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது.
இதனை அமெரிக்கா ராணுவ தலைமையகம் அமைந்துள்ள பென்டகனை சேர்ந்த செய்தி தொடர்பாளர் சீன் பார்னெல் அவருடைய எக்ஸ் வலைதளத்தில் உறுதி செய்துள்ளார்.
நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு துறை மந்திரிகளுக்கான உயர்மட்ட கூட்டத்தில், உக்ரைனுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை அளிப்பதற்கு முன்னுரிமை கொடுக்கும் புதிய திட்டத்தில் உறுப்பு நாடுகள் அனைவரும் முன்வர வேண்டும் என்று நேட்டோ கூட்டணி நாடுகளை ஹெக்சேத் வலியுறுத்தி கேட்டு கொண்டார். இந்நிலையில், ரஷியாவுக்கு எச்சரிக்கை விடுத்த சில மணிநேரத்தில், அமெரிக்க பாதுகாப்பு மந்திரியின் விமானம் இங்கிலாந்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
English Summary
US Secretary of Defense warned Russia thrilling events unfolded within a few hours