ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய கமல்ஹாசனுக்கு அழைப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து..!
Chief Minister MK Stalin congratulates Kamal Haasan on his invitation to join the Oscars committee
சர்வதேச சினிமாவில் இந்தியாவின் பெருமையை உயர்த்தும் விதமாக, நடிகர் கமல்ஹாசன் மற்றும் ஆயுஷ்மான் குரானா ஆகியோருக்கு ஆஸ்கர் விருதுக்கான குழுவில் சேர்வதற்கான அழைப்பு விடப்பட்டுள்ளது. நடிகர் கமல்ஹாசனுக்கு இந்த அழைப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

உலக அளவில் திரைத்துறையின் உச்சபட்ச விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுக்கான குழுவில் இணைய அழைப்பினைப் பெற்றிருக்கும் அன்பு நண்பர் - கலைஞானி கமல்ஹாசனுக்கு என் வாழ்த்துகள்!
மொழி - தேச எல்லைகளைக் கடந்து திரைத்துறையினர் மீது தாங்கள் செலுத்திய பெரும் தாக்கத்துக்கான தாமதான அங்கீகாரமே இது. இன்னும் பல தேடி வரும் உயரம் தங்களுடையது! என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Chief Minister MK Stalin congratulates Kamal Haasan on his invitation to join the Oscars committee