இந்தியாவின் அதிகம் சம்பளம் பெறும் நடிகர் அல்லு அர்ஜூன் – புஷ்பா 2 பட வெற்றிக்குப் பிறகு 2 ஆண்டுகள் பட ரிலீஸ் இல்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றம்! - Seithipunal
Seithipunal


புஷ்பா 2 படம் மூலம் உலகளவில் சாதனை படைத்த தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன், தற்போது இந்திய சினிமாவில் அதிக சம்பளம் பெறும் நடிகர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். 2024-ல் வெளியான புஷ்பா 2 திரைப்படம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மட்டும் ரூ.1740 கோடி வசூலித்து, பிரமாண்ட வெற்றியைப் பெற்றது. இதில் அல்லு அர்ஜூனுக்கு ரூ.300 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டது. இது, தற்போது வரை எந்த நடிகருக்கும் வழங்கப்படாத அதிகபட்ச தொகையாகும்.

தமிழ் நடிகர்களில் தளபதி விஜய் தனது "ஜனநாயகன்" படத்துக்காக ரூ.275 கோடி, அஜித் "குட் பேட் அக்லீ" படத்துக்காக ரூ.110 கோடி, மற்றும் ரஜினிகாந்த் தனது சமீபத்திய படங்களுக்கு 125 கோடி முதல் 270 கோடி வரை சம்பளம் பெற்றிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த பட்டியலில் பாலிவுட் இளவரசராக விளங்கும் ஷாருக்கான் கூட தனது "டங்கி" படத்துக்காக 150 கோடி முதல் 250 கோடி வரை சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

வசூல் தரப்பில் பார்க்கும் போது, GOAT படம் ரூ.450 கோடி, லியோ படம் ரூ.621 கோடி வசூலித்தாலும், புஷ்பா 2 இந்தியாவில் மட்டும் ரூ.1469 கோடி வசூலித்து, பல முன்னணி ஹீரோக்களின் படங்களை பிந்தியடித்துள்ளது.

இந்த பெரும் வெற்றிக்குப் பிறகு, அல்லு அர்ஜூனின் அடுத்த படம் குறித்த தகவல்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அவரது 22வது திரைப்படத்தை இயக்குநர் அட்லீ இயக்கவுள்ளார், மேலும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் பட்ஜெட் மட்டும் ரூ.800 கோடி என கூறப்படுகிறது. ஹாலிவுட் தரத்தில் இருக்கும் வகையில், இந்தப் படம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அல்லு அர்ஜூனுக்கும் ரூ.175 கோடி சம்பளமாகவும், லாபத்தில் 15% பங்காகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இயக்குநர் அட்லீக்கு ரூ.100 கோடி சம்பளமாக வழங்கப்படவுள்ளதும்கூட குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்தப் படம் 2026 அல்லது 2027ஆம் ஆண்டில் திரைக்கு வரலாம் என கூறப்படுகிறது. இதனால், அடுத்த 2 ஆண்டுகளில் அல்லு அர்ஜூனின் எந்த படமும் திரைக்கு வர வாய்ப்பில்லை என்பதால், அவரது ரசிகர்கள் சிலளவுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

அல்லு அர்ஜூனின் மொத்த நிகர சொத்து மதிப்பு ரூ.460 கோடி ஆகும். சம்பளத்திலும், வசூலிலும், மக்கள் ஆதரவிலும் இவர் இந்திய சினிமாவில் மிக முக்கியமான நட்சத்திரமாக மாறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fans are disappointed that India highest paid actor Allu Arjun has not released a film for 2 years after the success of Pushpa 2


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->