இரண்டு நாடு கொள்கையை பற்றி பேசி பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளார்: கோபத்தில் பரூக் அப்துல்லா..!
Pakistan Army Chief has caused outrage by talking about the two nation policy Farooq Abdullah in anger
''பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், இரண்டு நாடு (இந்தியா - பாகிஸ்தான்) கொள்கையை பற்றி பேசி ஆத்திரத்தை தூண்டி விட்டு உள்ளதாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும், கூறியுள்ளதாவது: காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு, பாதுகாப்பு தோல்வி மற்றும் உளவுத்துறை குறைபாடு என்பதில் சந்தேகம் இல்லை எனவும், எங்களது வாழ்க்கை சிறப்பாக செல்வது பாகிஸ்தானுக்கு பிடிக்கவில்லை. இதனால் தான் பாகிஸ்தான் பஹல்காம் தாக்குதலை நடத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இது இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை எப்படி பாதிக்கும் என்பதை பாகிஸ்தான் உணரவில்லை எனவும், கடந்த 10 ஆண்டுகளாக முஸ்லிம்கள் தொடர்பாக பல கதைகள் நடந்து வருகின்றன. அதனை நாங்கள் எதிர்கொண்டு வருகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தற்போது பாகிஸ்தான் ராணுவ தளபதி ஆசிம் முனிர், இரண்டு நாடு கொள்கையை பேசி ஆத்திரத்தை தூண்டி விட்டுள்ளார். ஒரு வேளை போர் வந்தால், பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு வரும். ஆனால், அதன் முடிவு கடவுளுக்கே தெரியும் என்று பரூக் அப்துல்லா குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Pakistan Army Chief has caused outrage by talking about the two nation policy Farooq Abdullah in anger