'சார் தாம்' யாத்திரை: நாளை கேதர்நாத் கோவில் நடை திறப்பு..!
Kedarnath temple will be opened tomorrow
இந்த ஆண்டிற்கான 'சார் தாம்' யாத்திரைப் கடந்த 10-ந்தேதி தொடங்கிகப்பட்டது. இந்துக்களின் நான்கு புனித தளங்களான பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி ஆகிய தளங்களுக்குச் செல்லும் யாத்திரையானது 'சார் தாம்' யாத்திரை யாகும்.
ஆண்டுதோறும் 06 மாதங்கள் மட்டுமே பக்தர்கள் இந்த கோவில்களுக்குச் சென்று சிவபெருமானை தரிசிக்க முடியும். ஏனெனில், குளிர்காலங்களில் குகைக்கோவில்கள் மூடப்பட்டு விடுவதோடு, பாதைகள் பனியால் மூடப்பட்டிருக்கும் எனவே, பாத யாத்திரை செல்ல தடை விதிக்கப்படுகிறது.

அக்ஷயதிரிதியை தினத்தை முன்னிட்டு 'சார் தாம்' யாத்திரை நேற்றையதினம் தொடங்கியது. கங்கோத்ரி மற்றும் யமுனோத்ரி கோவில்களின் நடைகள் திறக்கப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில், மே 02-ந்தேதி (நாளை) அதிகாலை 07 மணிக்கு கேதர்நாத் கோவில் நடை திறக்கப்படவுள்ளது. இதனை முன்னிட்டு கேதர்நாத் கோவிலில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களின் யாத்திரைக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்ற நிலையில், தொடர்ந்து வரும் 04-ந்தேதி பத்ரிநாத் கோவில் நடை திறக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kedarnath temple will be opened tomorrow