குவைத்தில் அதிர்ச்சி: அறையில் கத்தி குத்து காயங்களுடன் இறந்து கிடந்த இந்திய தம்பதி மீட்பு..!
Indian couple found dead with stab wounds in Kuwait rescued
கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த சுராஜ் மற்றும் எர்ணாகுளத்தைச் சேர்ந்த பின்ஸி ஆகியோர் கணவன், மனைவி. இருவரும் குவைத்தில் நர்ஸாக பணியாற்றி வந்துள்ளனர். குவைத் சுகாதாரத்துறையின் கீழ் உள்ள மருத்துவ மையத்தில் சுராஜூம், பாதுகாப்புத்துறையில் செவிலியராக பின்ஸியும் வேலை செய்து வந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் கத்தி குத்து காயங்களுடன் உயிரிழந்து கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் இரவுப் பணி முடித்து வந்த நிலையில், உடலில் ரத்த காயங்களுடன் அறையில் உயிரிழந்து கிடந்துள்ளனர். காவலாளி கொடுத்த தகவலின் பேரில் போலீசார் நேரில் சென்று, உடல்களை மீட்டு விசாரணை நடத்தியுள்ளனர்.

இவர்கள் இருவரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாறி மாறி கத்தியால் குத்தி உயிரை மாய்த்துக் கொண்ட்டுள்ளதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. அத்துடன், இருவரின் கைகளிலும் ரத்தத்துடன் கத்தி இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Indian couple found dead with stab wounds in Kuwait rescued