மேகவெடிப்பு வெள்ளம்..ஜம்மு காஷ்மீர்ரில் 3-வது நாளாக தொடரும் மீட்புப்பணிகள்! - Seithipunal
Seithipunal


 ஜம்மு காஷ்மீர்ரில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெரிய பாறைகள், மரக்கட்டைகள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் மற்றும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

இந்தநிலையில் வடக்கு ஆந்திராவிற்கு அருகே வங்காள விரிகுடாவில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மற்றும் அரபிக்கடல் வரை நிலவும் தாழ்வுப் பகுதி காரணமாக மராட்டிய மாநிலத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இதன்காரணமாக  மும்பை, தானே மற்றும் பல்கார் ஆகிய மாவட்டங்களுக்கு நேற்றைய தினம் வானிலை மையம் சார்பில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று இரவு முழுவதும் மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.இதேபோல பல இடங்களில் மழை பெய்தது.

இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரின், கிஷ்துவார் மாவட்டத்தில் உள்ள சோசிட்டி கிராமத்தில் நேற்று ஏற்பட்ட மேக வெடிப்பால் திடீர் என கனமழையால்  அங்குள்ள ஆற்றில் திடீர் என வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த கிராமத்தில் இருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ள மச்சைல் மாதா மலைக்கோவிலுக்கு செல்ல அங்கு குவிந்திருந்த ஏராளமான பக்தர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். மலைப்பாதையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. யாத்திரைக்கு சென்ற பக்தர்கள் உள்ளிட்ட பலர் இதில் சிக்கி கொண்டனர். மலைப்பாதையில் இருந்த வீடுகள், கட்டிடங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.

வாரி சுருட்டிசென்ற வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, 60 பேர் உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 100-க்கும் மேற்பட்டோருக்கு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 170 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். இதற்கிடையில், 75 பேர் காணாமல் போனதாக அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர், அவர்களில் சிலர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு பெரிய பாறைகள், மரக்கட்டைகள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் புதைந்திருக்கலாம் என்று உள்ளூர்வாசிகள் மற்றும் நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர்.

மீட்பு நடவடிக்கையில், 3-வது நாளாக தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், துணை ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தால் கிட்டத்தட்ட 10க்கும் மேற்பட்ட ஜேசிபி இயந்திரங்கள் கொண்டுவரப்பட்டு, மீட்புப்பணிகள் நடந்து வருகிறது. மோப்பநாய் உதவியுடன் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cloudburst flood Rescue operations continue for the 3rd day in Jammu and Kashmir


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->