தொடர் விடுமுறை: 3 லட்சம் பேர் அரசு பேருந்துகளில் பயணம்!
Continuous holiday 300,000 people traveling on government buses
தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 2 நாட்களில் அரசு பேருந்துகளில் 3 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர் என்று அரசு விரைவு போக்குவரத்து கழக தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் நேற்று சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.இந்தநிலையில் சுதந்திர தினம் மறுநாள் இன்று சனிக்கிழமை அதனை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வருவதால். தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் பலர் தென் மாவட்டங்களில் உள்ள பலர் அவர்களது சொந்த ஊருக்கு புறப்பட்டனர். முக்கியமாக ஊர் பகுதிகளில் ஆடித் திருவிழா நடந்து வருவதால் சென்னையில் இருந்து தென் மாநிலங்களுக்கு மக்கள் படையெடுத்தனர். அதாவது சாதாரண நாட்களை சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கு 650 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை கட்டணம் இருக்கும் இந்த தொடர் விடுமுறையால் 1500 ரூபாய்க்கு குறைந்த கட்டணம் இல்லை என்று ஆம்னி பஸ்களில் சொல்லப்படுகிறது.
சுதந்திர தினம் மற்றும் வார இறுதி நாள்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 3 லட்சத்துக்கு மேற்பட்ட பயணிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பாக அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், வார விடுமுறை மற்றும் சுதந்திர தினம் தொடர் விடுமுறையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி நிலவரப்படியும் மற்றும் நேற்றுஅதிகாலை 3 மணி வரை வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள், 1,160 சிறப்புப் பேருந்துகள் என 3,252 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,78,860 பயணிகள் பயணம் செய்தனர்.
13-ந்தேதி தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகள் மற்றும் 436 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,35,040 பயணிகள் பயணம் செய்தனர். இதன் மூலம் கடந்த 13.08.2025 முதல் 15.08.2025 அதிகாலை 3 மணி வரை 5,780 பேருந்துகளில் 3,13,900 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
English Summary
Continuous holiday 300,000 people traveling on government buses