வாக்காளர் பட்டியல்..தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்!
Voter list..Explanation by the Chief Election Commission
நாட்டில் வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டதில் 65 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.மேலும், 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் பாஜகவுடன் இணைந்து தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபட்டதாகவும், குறிப்பாக மத்திய பெங்களூரு தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ்புரா சட்டமன்ற தொகுயியில் மட்டும் 1 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்கள் ஓட்டுப்போடதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.இதையடுத்து வாக்கு திருட்டு தொடர்பாக தன்னிடம் ஆதாரம் உள்ளதாக பல்வேறு ஆவணங்களை ராகுல் காந்தி வெளியிட்டதை தொடர்ந்து இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் தேஎர்தல் ஆணையம் நோக்கி ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணியாக சென்றனர்.
இந்தநிலையில் , இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தது.
மேலும் பீகாரில் 65 லட்சம் வாக்காளர்கள் பெயர் நீக்கப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் இந்த வழக்கில் கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பீகார் வரைவு வாக்காளர் பட்டியலில் நீக்கபட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை 19ம் தேதி மாலைக்குள் மாவட்ட தேர்தல் அதிகாரிகளின் இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில், வாக்கு திருட்டு, பீகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப்பட்டியல் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் இன்று விளக்கம் அளித்துள்ளது. நாட்டில் வாக்காளர் பட்டியல் வெளிப்படைத்தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்ட அறிக்கையில்,இந்தியாவில் நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல் நடைமுறை சட்டப்பூர்வமாக பரவலாக்கப்பட்ட பல்வேறு அடுக்குகளை கொண்ட நடைமுறையாகும்.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டப்பின் அதே பட்டியல் டிஜிட்டல் முறையிலும் பேப்பர் முறையிலும் அரசியல் கட்சிகளுக்கு பகிரப்படுகின்றன. அனைவரும் பார்க்கும் வகையில் அந்த பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பகிரபட்டுகிறது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டப்பின் அது டிஜிட்டல், பேப்பர் வடிவில் அரசியல் கட்சிகளுக்கு பகிரப்படுகிறது. அந்த பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்திலும் பகிரப்படுகிறது.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டப்பின் அதில் திருத்தங்கள், முறையீடுகள், எதிர்ப்புகளை பதிவு செய்ய 2 முறை அவகாசம் வழங்கப்படுகிறது.
சட்டம், விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள்படி வாக்காளர் பட்டியல் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் தயாரிக்கப்படுகிறது. வாக்காளர் பட்டியல் தயாரிப்பின் அனைத்து நிலைகளிலும் அரசியல் கட்சிகள் பங்குபெறுகின்றன.
வாக்காளர் பட்டியல், வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் தவறுகள் உள்ளதாக சில அரசியல் கட்சிகள், தனிநபர்கள் சமீபத்தில் பிரச்சினை எழுப்பியுள்ளனர்.
வாக்காளர் பட்டியல் தொடர் சரியான நேரத்தில் சரியான நடைமுறையை பின்பற்றி இந்த பிரச்சினைகள் எழுப்பப்பட்டிருந்தால் பிரச்சினை உண்மையானது என்றால் தேர்தல் பதிவு அதிகாரிகள் மூலம் சரிசெய்யப்பட்டிருக்கும்.
வாக்காளர் பட்டியலை சரிசெய்ய, ஆய்வு செய்ய அரசியல் கட்சிகள், வாக்காளர்களின் பங்களிப்பை தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து வரவேற்கிறது. இது தேர்தல் அதிகாரிகள், தவறுகளை திருத்தி வாக்காளர் பட்டியலை சரிசெய்ய உதவும். அதுவே தேர்தல் ஆணையத்தின் முக்கிய நோக்கமாகும்இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Voter list..Explanation by the Chief Election Commission