11 ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுத தளவாடங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்..! - Seithipunal
Seithipunal


அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதில் இருந்து அமெரிக்காவிடமிருந்து ராணுவ கொள்முதலை அதிகரிக்கும்படி இந்தியாவை வலியுறுத்தி வருகிறார். இதற்கமைய இந்தியாவுக்கு 11,083 கோடி மதிப்பில் ராணுவ தளவாடங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளது. 

பெண்டகனின் கீழ் செயல்படும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அமைப்பு(DSCA) தளவாடங்கள் விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியதுடன், அது குறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, sea-vision software, remote software, analytic support மற்றும் அதுசார்ந்த தளவாடங்களை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்பு கொண்டுள்ளது.

காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தளவாடங்களை விற்க அமெரிக்கா ஒப்புதல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், குறித்த  தளவாடங்களினால், இந்தியாவின் பாதுகாப்பு அதிகரிப்பதுடன், எதிர்காலத்தில் ஏற்படும் அச்சறுத்தல்களை எதிர்கொள்ள முடியும் என படையினர் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

US approves the sale of weapons and equipment worth Rs 11083 crore to India


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->