பாகிஸ்தானின் பிரபல நடிகர்-நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கங்கள் இந்தியாவில் முடக்கம்..! - Seithipunal
Seithipunal


ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பள்ளத்தாக்கில் கடந்த 22- ஆம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இந்நிலையில் பாகிஸ்தான் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சமூக வலைத்தள பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஹனியா அமிர், மஹிரா கான் உள்ளிட்ட பல பாகிஸ்தான் நடிகர்களின் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. அத்துடன், பாகிஸ்தானிய பிரபலங்கள் அலி ஜாபர், சனம் சயீத், பிலால் அப்பாஸ், இக்ரா அஜீஸ், இம்ரான் அப்பாஸ், சஜல் அலி ஆகியோரின் கணக்குகளும் முடக்கப்பட்டுள்ளன.

முன்னதாக 16 பாகிஸ்தானிய யூடியூப் சேனல்களை இந்தியா தடை செய்துள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயி் அக்தர் யூடியூப் சேனலும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Instagram pages of famous Pakistani actors and actresses have been blocked in India


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->