வாரிசுகளுக்கு சீட் கேட்கும் சீனியர் திமுக அமைச்சர்கள்? லிஸ்ட் பெருசா போகுதே! அதிர்ச்சியில் ஸ்டாலின்! பயத்தில் ஜூனியர்ஸ்! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பொதுக்கூட்டங்கள், வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டங்கள் மற்றும் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், திமுக அமைச்சரவையில் உள்ள சில அமைச்சர்கள் தங்களது மகன்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட சீட் கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அந்த பட்டியலில் முதலில் குறிப்பிடப்படுபவர் திமுக பொதுச்செயலாளரும் மூத்த அமைச்சருமான துரைமுருகன். 87 வயதான அவர், வேலூர் மாவட்டம் காட்பாடி தொகுதியில் 1996 முதல் தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்து வருகிறார். தற்போது உடல்நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதால் அவருக்கு இந்த முறை ஓய்வு அளிக்க முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், துரைமுருகன் தன்னுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் அல்லது தனது மருமகளுக்கு சீட் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது மகன் கதிர் ஆனந்த் ஏற்கனவே வேலூர் தொகுதியின் திமுக எம்.பி.யாக இருப்பதால் கட்சித் தலைமையில் தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்ததாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்கு சீட் கேட்டு வருவதாக கூறப்படுகிறது. திருவண்ணாமலை தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கும் எ.வ.வேலு, தனது மகனை அரசியல் வாரிசாக அறிமுகப்படுத்த விரும்புகிறார். திமுக மருத்துவர் அணி மாநில துணைத்தலைவராக உள்ள கம்பனை போளூர் தொகுதியில் களமிறக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தனது மகன் கதிரவனை புவனகிரி அல்லது சிதம்பரம் தொகுதிகளில் ஒன்றில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது அவர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.

இதற்கிடையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தனது மகன் ரமேஷ்க்கு சாத்தூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கோரியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அருப்புக்கோட்டை தொகுதியின் எம்எல்ஏவாக உள்ள அவர், முன்பு சாத்தூர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தியதால் அந்த தொகுதியில் மகனை வெற்றி பெறச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

அதேபோல் ராணிப்பேட்டை தொகுதி எம்எல்ஏ மற்றும் அமைச்சர் காந்தி தனது மகன் வினோத்துக்கு சீட் கோரி வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தனது மகன் டாக்டர் அண்ணாமலைக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரகுபதி தற்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார்.

இதனால், வரும் தேர்தலில் திமுகவில் வாரிசு அரசியல் விவாதம் மீண்டும் எழும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. அமைச்சர்களின் இந்த கோரிக்கைகளுக்கு கட்சித் தலைமையகம் என்ன முடிவு எடுக்கும் என்பது தேர்தல் அறிவிப்பிற்கு பிறகு தெளிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Senior DMK ministers asking for seats for their heirs Go ahead and read the list Stalin in shock Juniors in fear


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->