06-வது தொடர் வெற்றி: 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை அணி..!
Mumbai beat Rajasthan by 100 runs in a huge victory
நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் மும்பை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய மும்பை அணி வீரர்கள் ரோகித் ஷர்மா - ரிக்கெல்டன் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதன் படி, 29 பந்துகளில் அரைசதம் விளாசிய ரிக்கெல்டன், 61 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடி ரோகித் ஷர்மா, 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடினர், இதனால், 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 02 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்களை குவித்தது. இதில், ஹர்திக் பாண்டியா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருவரும் தலா 23 பந்துகளில் தலா 48 ரன்களுடனும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
இதனை தொடர்ந்து 218 என்ற வெற்றி இலக்கோடு தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது. இதில் கடந்த போட்டியில் 35 பந்துகளில் 101 ரன்களை குவித்து, உலகமே வியந்து பார்த்த இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி 02 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால் (13), பராக் (16), ராணா (9), ஹெட்மயர் (0), ஷிவம் துபே (15) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து தடுமாறிய ராஜஸ்தான் அணியின் தீக்சனா (02), குமார் கார்த்திகேயா (02), ஆகாஷ் மத்வால் (04) ஓட்டங்களை எடுத்தார். ஜோப்ரா ஆச்சர் 30 இறுதியில், 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி ஈட்டியது.
மும்பை அணியின் 06-வது தொடர் வெற்றி மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி இந்த தோல்வியின் மூலம் சென்னை அணியை அடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் பிளே ஆப் வாய்ப்பை இழந்ததுள்ளது.
English Summary
Mumbai beat Rajasthan by 100 runs in a huge victory