சிம்புவின் "நீ சிங்கம் தான்'' பாடலின் தீவிர ரசிகரான விராட் கோலி: வீடியோ உள்ளே..!
Virat Kohli enjoys listening to the song Nee singam than
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி. ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் ஆல் டைம் நாயகன் என்று கூட சொல்லலாம். தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் ஆர்.சி.பி. அணியில் வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரின் சிறப்பான ஆட்டத்தால் ஆர்.சி.பி. அணி டாப் 04-க்குள் இடம்பெற்றுள்ளது. இதன் காரணமாக 18 வருடம் காத்திருந்த தவத்தின் பதிலாக 'ஈ சாலா கப் நமதே' (இந்த வருடம் கப் எங்களுக்குதான்) என்று பெங்களூரு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், "சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான பத்து தல படத்தில் இடம்பெற்ற 'நீ சிங்கம்தான்' பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
அண்மையில் விராட் கோலி கொடுத்த பேட்டி ஒன்றில் ,"தற்போது எனக்கு மிகவும் பிடித்த பாடல், இதை கேட்டால் நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள், நீ சிங்கம் தான் பாடலை விரும்பிக் கேட்கிறேன்" என்று தெரிவித்தார்.
இந்த வீடியோவை ஆர்.சி.பி. அணி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில், இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனையடுத்து குறித்த வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த சிம்பு, "நீ சிங்கம் தான்" என்று விராட் கோலிக்கு மேலும் புகழாரம் சூட்டியுள்ளார். இதனை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
English Summary
Virat Kohli enjoys listening to the song Nee singam than