அது நிச்சயம் நடக்கும்.. பிரதமர் மோடி ஒரு போராளி - ரஜினிகாந்த் பரபரப்பு பேச்சு!
Rajinikanth say about PM Modi Pahalgam attack
மும்பையில் நடைபெற்ற சர்வதேச ஒலி, ஒளி கருத்தரங்கில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றிய பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
கருத்தரங்கத்தில் உரையாற்றிய ரஜினிகாந்த், “பஹல்காம் தாக்குதல் நடைபெற்ற நிலையில், இந்த நிகழ்வில் பிரதமர் பங்கேற்க முடியாது என சிலர் நினைத்தனர்.
ஆனால் நான், இது நிச்சயம் நடைபெறும் என முழு நம்பிக்கையுடன் இருந்தேன். மோடி ஒவ்வொரு நேரத்திலும் தனது மன உறுதியால் சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெறும் தலைவர். அவர் ஒரு உண்மையான போராளி,” என்றார்.
மேலும், “ஜம்மு–காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டுவதும், நாட்டின் கௌரவத்தை உயர்த்துவதும் மோடிக்கு சாத்தியமே. அவர் மக்கள் நலன் குறித்து உறுதியுடன் செயல்படக்கூடிய தலைவர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்,” என ரஜினிகாந்த் புகழ்ந்து பேசியார்.
இந்நிகழ்வில் தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலரும் பங்கேற்றனர்.
English Summary
Rajinikanth say about PM Modi Pahalgam attack