முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸின் மூத்த தலைவர் கிரிஜா வியாஸ் மறைவு; ராஜஸ்தான் முதலமைச்சர் இரங்கல்..!
Former Union Minister and senior Congress leader Girija Vyas passes away Rajasthan Chief Minister condoles
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான கிரிஜா வியாஸ் காலமாகியுள்ளார். ராஜஸ்தானின் உதய்ப்பூர் நகரில் வசித்து வந்த இவர், கடந்த மார்ச் 31-ந்தேதி நடந்த ஆரத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, அவருடைய துப்பட்டாவில் தீப்பிடித்து கொண்டது. இதனால், அவருக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டன.
அதனை தொடர்ந்து உடனடியாக உதய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் மேலதிக சிகிச்சைக்காக ஆமதாபாத் நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், கிரிஜா வியாஸ் ஒருமாத கால சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலகியுள்ளார். 79 வயதாக அவருடைய இறுதி சடங்கு உதய்ப்பூரில் நாளை நடக்கவுள்ள நிலையில் பல அரசியல் தலைவர்களும் அவருக்கும் இரங்கலைகளை தெரிவித்துள்ளனர்.
அதன் படி, கிரிஜா வியாஸ் மறைவுக்கு ராஜஸ்தானின் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், ராஜஸ்தான் முதலமைச்சர் பஜன் லால் சர்மா வெளியிட்ட இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். அதில் அவர், '' கிரிஜா வியாஸின் வாழ்வு பொது சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது. மென்மையாக நடந்து கொள்ளும் விதம் கொண்ட அவர், ஒரு பிரபல தலைவராக எப்போதும் அறியப்படுவார். அவருடைய மறைவு மாநில அரசியலுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவருடைய ஆன்மா இறைவனடியில் இளைப்பாறட்டும் என நான் கடவுளிடம் வேண்டி கொள்கிறேன். இந்த துயரை தாங்கி கொள்ள அவருடைய குடும்பத்திற்கு இறைவன் வலிமை தரட்டும் என குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Former Union Minister and senior Congress leader Girija Vyas passes away Rajasthan Chief Minister condoles