டெல்லிக்கு சென்ற அதிமுக விவகாரம்..பாஜக மேலிடம் அழைப்பா? டெல்லி செல்லும் எடப்பாடி..அமித்ஷாவுடன் பேசப்போவது என்ன? - Seithipunal
Seithipunal


சென்னை: அதிமுகவில் கலகம் மெல்ல வெடிக்கும் சூழலில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி பயணம் செல்லவிருக்கிறார். பாஜக மேலிடம் அழைப்பின் பேரிலேயே அவர் செல்வதாகவும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன், “கட்சியை விட்டு சென்றவர்களை மீண்டும் இணைக்க வேண்டும்” என்று கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாள் கெடு விதித்தார். அதற்கு மறுநாளே, செங்கோட்டையனின் கட்சி பதவி நீக்கப்பட்டது. இதனால் எடப்பாடி–செங்கோட்டையன் மோதல் அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மன அமைதிக்காக ஹரித்வாருக்குச் செல்வதாக கூறிய செங்கோட்டையன் திடீரென டெல்லி பறந்து சென்று, அமித்ஷா மற்றும் நிர்மலா சீதாராமனை சந்தித்ததாகக் கூறினார். ஆனால் பாஜக தரப்பில் இதற்கான உறுதி இதுவரை வழங்கப்படவில்லை. செங்கோட்டையன் விதித்த 10 நாள் கெடு நாளையுடன் முடிவடைய இருப்பதால், அதிமுகவில் மீண்டும் உள்கலகம் வெடிக்கலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், “செங்கோட்டையனை சந்திப்பேன்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல டிடிவி தினகரன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்றும், “வேறு யாரை முன்வைத்தாலும் ஏற்க தயார்” என்றும் வெளிப்படையாக அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்லும் பயணம் அதிமுக–பாஜக கூட்டணிக்கு புதிய திருப்பம் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள சி.பி. ராதாகிருஷ்ணனையும் மரியாதை நிமித்தமாக அவர் சந்திக்க உள்ளார்.

அதிமுக–பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணைவார்கள் என எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து கூறிவந்தாலும், இதுவரை எந்த பெரிய கட்சியும் இணைக்கப்படவில்லை. தேமுதிக, பாமக ஆகியவை இன்னும் தங்களின் நிலைப்பாட்டைத் தெளிவாக அறிவிக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளும் டெல்லி பயணம், அதிமுகவின் உள்கட்டமைப்பு, கூட்டணி அரசியல் என இரு துறைகளிலும் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK Delhi visit issue will the BJP leadership call Edappadi going to Delhi what will he talk to Amit Shah about


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->