பொருநை அருங்காட்சியகத்தில் ‘ராம்’ எழுத்து… திறப்பு விழாவுக்கு முன் வெடித்த மொழிச் சர்ச்சை..!
word Ram Bronze Museum language controversy erupted before opening ceremony
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகளின் போது கண்டெடுக்கப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்களை பாதுகாத்து காட்சிப்படுத்துவதற்காக, திருநெல்வேலியில் பொருநை அருங்காட்சியகம் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 21ஆம் தேதி திறந்து வைக்க உள்ள நிலையில், இப்பகுதி மக்கள் பெரும் எதிர்பார்ப்பிலும் மகிழ்ச்சியிலும் உள்ளனர்.இந்நிலையில், அருங்காட்சியக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள புல்வெளியில் அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பாறையில், இந்தி மொழியில் ‘ராம்’ என எழுதி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எழுத்து சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.அருங்காட்சியகத்தில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்கள் சிலர் பெயிண்ட் பயன்படுத்தி அந்த பாறையில் இந்தி எழுத்தை எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து சம்பவத்தை அறிந்த அரசு அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அதே வடமாநில தொழிலாளர்களை கொண்டு அந்த இந்தி எழுத்துகளை முழுமையாக அழித்தனர்.
தமிழ் வரலாறும், பொருநை நதிக்கரையோர நாகரிகமும் பேசப்படும் அருங்காட்சியகத்தில் இந்தி எழுத்து தோன்றிய சம்பவம் அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது. அதே நேரத்தில், திறப்பு விழாவுக்கு முன்பே ஏற்பட்ட இந்த சம்பவம் அதிகாரிகள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
word Ram Bronze Museum language controversy erupted before opening ceremony