தவெக விஜய் உடன் கூட்டணியா? இணைப்பா? சஸ்பென்ஸ் வைத்த ஓபிஎஸ்! அதிர்ச்சியில் எடப்பாடி! குஷியில் விஜய்! - Seithipunal
Seithipunal


அதிமுக உள்கலகம் சூடுபிடித்துள்ள சூழலில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று ஊடகங்களிடம் பேசிய போது, எதிர்காலத்தில் தவெக (தமிழக வெற்றிக்கொடி) கட்சியுடன் கூட்டணி அமைய வாய்ப்பு இருப்பதை சுட்டிக்காட்டினார்.

சென்னை செல்ல திண்டுக்கல் ரயில் நிலையம் வந்திருந்த ஓபிஎஸ், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
"அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பத்து நாள் கெடு இன்றுடன் முடிவடைகிறது. விரைவில் நல்ல செய்தி சொல்வார்," என்றார்.

மேலும்,"அதிமுகவில் நிலவும் சூழ்நிலையில் சசிகலாவை சந்திக்கும் வாய்ப்பு உள்ளது. உரிய நேரத்தில் அவரைச் சந்திப்பேன். அதேபோல டிடிவி தினகரனையும், செங்கோட்டையனையும் சந்திப்பேன்," என்று தெரிவித்துள்ளார்.

தவெக தலைவர் விஜய்யின் பிரச்சாரத்தில் மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டைப் பற்றி கேட்கப்பட்டபோது, அதைப் பற்றி தெரியாது என்றார். ஆனால், கூட்டணி குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,"எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம்; அது நல்லதாகவே நடக்கும்," என குறிப்பிட்டார்.

பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும்,"இரண்டு நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் என்னுடன் பேசியார். சந்திக்க வேண்டும் எனக் கூறினார். நிச்சயம் சந்திப்போம் எனக் கூறியுள்ளேன்," என ஓபிஎஸ் தெரிவித்தார்.

இதற்கிடையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி – முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அதிமுகவில் இருந்து விலகியவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என 10 நாள் கெடு விதித்த செங்கோட்டையன், உடனடியாக பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

கட்சி விதிகளை மீறியதாகக் கூறி, அதிமுகவின் அமைப்புச் செயலாளர் மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, சுமார் 2,000க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஒருங்கிணைந்து ராஜினாமா செய்தனர்.

இந்தச் சூழலில், “செங்கோட்டையனின் முயற்சிக்கு முழு ஆதரவு அளிக்கிறேன். அவரை விரைவில் சந்திப்பேன். அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை ஏற்கத்தக்கது அல்ல. எடப்பாடி பழனிசாமிக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்,” என்று ஓபிஎஸ் வலியுறுத்தினார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Will Thaveka team up with Vijay Will they join The suspenseful OPS Edappadi is in shock Vijay is in joy


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->