கனடா பாராளுமன்ற தேர்தலில் 22 சீக்கியர்கள் வெற்றி..!
22 Sikhs win in the Canadian parliamentary election
கனடா பாராளுமன்றத்தில் நடந்த தேர்தலில் சீக்கியர்கள் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர். கனடாவில் கடந்த 28-ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் லிபரல் கட்சி, எதிர்க்கட்சியான கன்சர்வேட்டிவ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி ஆகியவை களமிறங்கியது. இத்தேர்தலில், மார்க் கார்னி தலைமையிலான ஆளும் லிபரல் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது.
இந்நிலையில், இந்த தேர்தலில் புதிய ஜனநாயக கட்சியை சேர்ந்த, காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஜக்மீத் சிங் தோல்வியடைந்தார். அவரது கட்சியும் படுதோல்வியடைந்தது. இதனால், அக்கட்சி தேசிய அந்தஸ்தை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் லிபரல் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட சீக்கியர்கள் 22 பேர் வெற்றி பெற்றுள்ளனர். பிராம்ப்டன் வடக்கு தொகுதியில் லிபரல் கட்சியை சேர்ந்த ரூபி சகோட்டா, பிராம்ப்டன் கிழக்கு தொகுதியில் சுக்தீப் கங் உள்ளிட்டோர் வெற்றி பெற்றுள்ளனர்.
இவர்களுடன் அமைச்சராக இருந்த அனிதா ஆனந்த், அஞ்சு தில்லான், சுக் தலிவால், ரன்தீப் சராய், பாரம் பெயின்ஸ் ஆகியோரும் வெற்றி பெற்றுள்ளனர். அத்துடன், கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜஸ்ராஜ் ஹலான், தல்விந்தர் ஹில், அமன்ப்ரீத் கில், அர்பன் கன்னா, டிம் உப்பால், பரம் கில், சுக்மன் கில், ஜக்சரண் சிங் மற்றும் ஹர்ப் கில் உள்ளிட்ட சீக்கியர்களும் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
22 Sikhs win in the Canadian parliamentary election