''அரசியல் அமைப்புகள், வரம்புக்குள் செயல்படும் போது மட்டுமே, மரியாதை சாத்தியம். மோதல்கள் இருக்கும் போது ஜனநாயகம் செழிக்காது''; துணை ஜனாதிபதி பேச்சு..!
Democracy does not thrive when there are conflicts Vice President speech
உத்தரப் பிரதேசத்தில் ஆளுநர் ஆனந்திபெட் படேல் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் ''அனைத்து அரசியல் அமைப்புகள், தங்களுக்கான வரம்புக்குள் செயல்படும் போது மட்டுமே, அத்தகைய மரியாதை சாத்தியமாகும். மோதல்கள் இருக்கும் போது ஜனநாயகம் செழிக்காது'' என்று கூறியுள்ளார்.
அங்கு அவர் மேலும் பேசுகையில், ஒவ்வொரு அரசியல்சாசன அமைப்புகளுக்கும் வரையறுக்கப்பட்ட பங்கு உள்ளது என்றும், அதில், எந்த ஒரு அமைப்பும், மற்றொரு அமைப்பின் பொறுப்புகளில் தலையிடக் கூடாது என்றும், அரசியலமைப்பை அதன் உண்மையான உணர்வில் இருந்து நாம் மதிக்க வேண்டும் எனவும் பேசியுள்ளார்.

அத்துடன், மிகவும் ஆபத்தான சவால்கள் உள்ளே இருந்து வருகின்றன. அவற்றை நாம் வெளிப்படையாக விவாதிக்க முடியாது என்றும் கூறியுள்ளார். மேலும், எந்த ஒரு தர்க்க ரீதியான அடிப்படையும் இல்லையெனவும் தேசிய வளர்ச்சியுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும், மேலும் அவை நிர்வாகத்தில் வேரூன்றி உள்ளன. இதுபோன்ற சவால்களை தான் தனிப்பட்ட முறையில் தாங்கிக் கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பேசுகையில், அனைத்து அரசியல் அமைப்புகளும் ஒன்றை ஒன்று மதிக்க வேண்டியது நமது கடமை. அந்த அமைப்புகள், தங்களுக்கான வரம்புக்குள் செயல்படும் போது மட்டுமே, அத்தகைய மரியாதை சாத்தியமாகும் என்றும், மோதல்கள் இருக்கும் போது ஜனநாயகம் செழிக்காது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், சட்டசபைகளால் தீர்ப்புகளை வழங்க முடியாது என்றும், அது நீதித்துறையின் வரம்பில் வவருகிறதாகவும், அதேபோல், நீதித்துறையும் அதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், நீதித்துறை மீது தனக்கு மரியாதை உண்டு. நம்மிடம் சிறந்த நீதிபதிகள் உளள்னர் எனக் கூற முடியும். ஆனால், ஒரு கூட்டு மற்றும் ஒற்றுமையான அணுகுமுறை தேவை என கேட்டுக் கொள்கிறேன் என்று துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியுள்ளார்.
English Summary
Democracy does not thrive when there are conflicts Vice President speech