ஸ்மிருதி மந்தனாவுக்கு காதலருடன் டும் டும் டும்: மகாராஷ்டிராவில் 20-ஆம் தேதி திருமணம்..! - Seithipunal
Seithipunal


இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா, தனது நீண்ட நாள் காதலரான இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலை  திருமணம் செய்யவுள்ளார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டனும், அதிரடி தொடக்க ஆட்டக்காரருமான ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலும் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் காதலித்து வந்தனர். இவர்கள் தங்களது காதலை கடந்த 2024-ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இந்நிலையில், சமீபத்தில் 'ஸ்மிருதி விரைவில் இந்தூரின் மருமகள் ஆகப் போகிறார்' என்று பலாஷ் முச்சால் சூசகமாகத் பதிவிட்டு இருந்தார். இதனால் இவர்களது திருமணம் குறித்த எதிர்பார்ப்புகளை அதிகரித்தது. 

இந்திய மகளிர் அணி சமீபத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க உலகக் கோப்பையை வென்றது. இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, பலாஷ்  முச்சால் தனது காதலியான ஸ்மிருதியுடன்  உலகக் கோப்பையை ஏந்தியபடி புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அதில், ஸ்மிருதியின் பெயர் மற்றும் ஜெர்சி எண்ணைக் குறிக்கும் 'SM18'என்ற டாட்டூவை அவர் கையில் பச்சை குத்தியிருந்ததும் ரசிகர்களிடையே வைரலானது.

இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா மற்றும் பலாஷ் முச்சாலின் திருமணம் வரும் 20-ஆம் தேதி அவரது சொந்த ஊரான மகாராஷ்டிராவின் சங்க்லியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருமண விழா, இருவரது குடும்பத்தினர் மற்றும் கிரிக்கெட் மற்றும் திரையுலகைச் சேர்ந்த நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொள்ளும் எளிய விழாவாக நடைபெறும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகக் கோப்பையை வென்ற சில நாட்களிலேயே ஸ்மிருதியின் திருமணச் செய்தி வெளியாகியுள்ளமை அவரது ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Smriti Mandhana to get married in Maharashtra on the 20th


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->