சிறுவனை கடத்திச் சென்று பாலியல் தொல்லை..பள்ளி ஆசிரியை கைது!
The boy was kidnapped and sexually assaulted School teacher arrested
11வயது சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக குஜராத் பள்ளி ஆசிரியை போலீசார் கைது செய்தனர்.
குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர் பள்ளி ஆசிரியை ஒருவர்.இவர் 11 வயது சிறுவனுடன் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவனின் பெற்றோர் இது குறித்துஅளித்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிறுவன் ஆசிரியையுடன் நடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் கிடைத்தன.
கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி, ஆசிரியை மான்சி சிறுவனுடன் சூரத்திலிருந்து புறப்பட்டு பேருந்தில் அகமதாபாத்தையும், பின்னர் வதோதரா வழியாக டெல்லியையும் அடைந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து மூன்று நாள் தேடுதலுக்குப் பிறகு, குஜராத்-ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் சிறுவனும் , ஆசிரியையும் கண்டுபிடிக்கப்பட்டனர்.
அவர்கள் இருவரும் ஜெய்ப்பூருக்குச் சென்று இரண்டு இரவுகள் ஒரு ஹோட்டலில் தங்கிஇருந்தபோது சிறுவன் மீட்கப்பட்டு ஆசிரியை மான்சி கைது செய்யப்பட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து போலீசார் போக்சோ சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளார். 11வயது சிறுவனை கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The boy was kidnapped and sexually assaulted School teacher arrested