ஸ்ரீ சிவசைலநாதர் ஆலய பிரம்மோற்சவ விழா..சபாநாயகர் செல்வம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்! - Seithipunal
Seithipunal


 அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சிவசைலநாதர் ஆலய 61 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் கலந்துகொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் கொம்யூன் சிவலிங்கபுரம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு திரிபுரசுந்தரி சமேத ஸ்ரீ சிவசைலநாதர் ஆலய 61 ஆம் ஆண்டு பிரம்மோற்சவ நிகழ்ச்சியின் திருத்தேர்  வீதி உலாவை தொடர்ந்து  பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த அன்னதான நிகழ்ச்சியில் மாண்புமிகு சட்டப்பேரவை தலைவர் திரு செல்வம் ஆர் அவர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி ஜெயராமன், கிருஷ்ணமூர்த்தி ரெட்டியார் மற்றும் கோயில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.  மேலும் பக்தர்கள் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு அறுசுவை உணவு அருந்தினர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The Brahmotsavam festival at Sri Sivasailanathar temple Chairman Selvam provided food donation to the devotees


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->