பெண் கேட்டு காதலி வீட்டுக்கு சென்ற காதலன்..கடைசியில் நடந்த அதிர்ச்சி!  - Seithipunal
Seithipunal


மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற  சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் செல்வம், 25 வயதான இவர், சென்னையை அடுத்த பழைய பல்லாவரத்தில் தங்கி, பெயிண்டராக வேலை பார்த்து வந்தார் . செல்வம், பல்லாவரம் வேலை பார்த்துவரும் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் 14 வயது மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது,

இந்த நிலையில் நேற்று சம்பவத்தன்று செல்வம், மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது தாயாரிடம், “உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தாருங்கள்” என கேட்டதால்  அதிர்ச்சியடைந்த அவர்,  கத்தி கூச்சலிட்டார்.

தாய் கத்தி கூச்சலிட்டதால்  ஆத்திரமடைந்த செல்வம், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால்  மாணவியின் கழுத்தை அறுத்தார். அதன் பின்னர் வீட்டுக்கு வெளியே வந்து அதே கத்தியால் தன்னைத்தானே கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் செல்வம் . கழுத்தை அறுத்ததால் படுகாயம் அடைந்த அவர், மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக  போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் காயம் அடைந்த மாணவிக்கு தாம்பரம் அரசு மருத்துவமனையில் ஒரு தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பல்லாவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மாணவியின் கழுத்தை அறுத்த வாலிபர் தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்ற இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The boyfriend who went to his girlfriend's house after asking the girl the shock that happened in the end


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->