கள்ளக்காதலனுடன் உல்லாசமாக வாழ கணவனை கொன்ற மனைவி!
A wife who killed her husband to live a carefree life with her lover
உல்லாசமாக வாழ கள்ளக்காதலனுடன் சேர்ந்து இளம்பெண் கணவரை கொன்ற சம்பவம் ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பாதபட்டினம் பகுதியில் உள்ள மொண்டி கொல்ல தெருவை சேர்ந்தவர நல்லி ராஜூ.27 வயதான இவருக்கும் 25 வயதான மவுனிகா என்ற பெண்வுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்த மவுனிகாவுக்கு அதே ஊரை சேர்ந்த குண்டு உதயகுமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் மவுனிகாவின் கள்ளக்காதலை அறிந்த கணவர் நல்லி ராஜூ கள்ளக்காதலை கைவிடுமாறு மவுனிகாவை எச்சரித்துள்ளார். ஆனால் இதனை கண்டுகொள்ளாத மவுனிகா உதயகுமாருடன் உல்லாசமாக இருந்து கள்ளக்காதலை தொடர்ந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் கள்ளக்காதல் மோகத்தால் நல்லி ராஜூவை கொலை செய்ய முடிவு செய்து திட்டம் தீட்டி வந்துள்ளார். கள்ளக்காதலன் உதயகுமாரை திருமணம் செய்து அவருடன் சேர்ந்து உல்லாசமாக வாழ வேண்டும் என்று மவுனிகா நினைத்து கணவனனை கொலை செய்துள்ளனர்
அதன்படி கடந்த 5-ந்தேதி சம்பவத்தன்று மவுனிகா வீட்டில் தான் சமைத்த உணவில் தனது கணவருக்கு தெரியாமல் 10 தூக்க மாத்திரைகள் கலந்து கொடுத்துள்ளார்.பின்னர் நண்பர் மல்லிகார்ஜுனுடன் வீட்டுக்கு வந்த உதயகுமார், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் ராஜுவின் முகத்தில் தலையணையை வைத்து அமுத்தி மூச்சு திணறவைத்து கொலை செய்து விட்டார்.
அதன் பிறகு ராஜுவின் உடலை அங்குள்ள குடியிருப்பு பகுதியில் பிணத்தை வீசி விட்டு சென்று விட்டனர்.
பின்னர் 6-ந்தேதி காலை வாலிபர் பிணம் கிடப்பதை கண்டு அப்பகுதியினர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சரிபார்த்த போது கொலை நடந்த தினத்தன்று சந்தேகத்திற்கு இடமாக மோட்டார் சைக்கிளில் மூட்டை ஒன்றுடன் உதயகுமார் சுற்றி திரிவது பதிவாகி இருந்தது தெரியவந்தது.
எனவே உதயகுமார் மற்றும் மவுனிகாவை போலீசார் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அப்போது மவுனிகா அளித்த வாக்குமூலத்தில், கள்ளக்காதலுடன் சேர்ந்து கணவர் நல்லி ராஜூவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து கள்ளக்காதலன் உதயகுமார், மவுனிகா மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மல்லிகார்ஜூன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
English Summary
A wife who killed her husband to live a carefree life with her lover