பல்துறை பணி விளக்க கண்காட்சி..அமைச்சர் நாசர் துவக்கிவைத்தார்!
Multi sector job exhibition Minister Nassar inaugurated it
திருத்தணியில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக பல்துறை பணி விளக்க கண்காட்சியை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள சண்முகர் திருமண மண்டபத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக அமைக்கப்பட்ட பல்துறை பணி விளக்க கண்காட்சியை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
திருத்தணி தணிகேசன் திருமண மண்டபத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் சிறப்பு பல்துறை பணி விளக்க கண்காட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை துறை, நகராட்சி நிர்வாகத் துறை, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் துறை, மாவட்ட தொழில்மையம், கூட்டுறவுத் துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை துறை, கால்நடைப் பராமரிப்புத் துறை, பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, கலை பண்பாட்டுத்துறை, மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை, ஆகிய துறைகள் சார்பாக அரங்குள் அமைக்கப்பட்டு பொதுமக்கள் அறியும் வண்ணம் திட்டங்கள் மற்றும் சாதனைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கும் வண்ணம் அனைத்து பணிகளும் உள்ளன.பள்ளிக்கல்வித்துறை சார்பாக பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பின்னர் கலை பண்பாட்டுத் துறை வாயிலாக சூரசங்காரம் நாடகத்தை பொதுமக்கள் கண்டு மகிழ்ந்தனர். மேலும், அதிநவீன மின்னணு விளம்பர வாகனம் மூலம் அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகள் அடங்கிய குறும்படங்கள் திரையிடப்பட்டது பார்வையிட்டனர்.
இதில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப்,திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் பி.அஸ்வின் குமார், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் கனிமொழி, திருத்தணி நகராட்சி ஆணையர் பாலசுப்பிரமணியம், திருத்தணி நகர்மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
English Summary
Multi sector job exhibition Minister Nassar inaugurated it