இந்தியர்கள் உட்பட 23 பேர் பலி! 21 பேருக்கு பறிபோன கண் பார்வை! குவைத்தில் கள்ளச்சாராய கொடூரம்!
kuwait toxic alcohol death rate increase
குவைத்தில் ஆசியாவைச் சேர்ந்த தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் நேற்று அங்கு விஷம் கலந்த சாராயம் அருந்தியதால் 63 பேர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக இருப்பது தெரியவந்துள்ளது.
சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அதில் 23 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களின் விவரங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.
மீதமுள்ளவர்களில் பலர் இன்னும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக 21 பேருக்கு நிரந்தரமாக கண் பார்வை இழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
விஷ சாராயம் சம்பவம் தொடர்பாக குவைத் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அங்கு சட்டவிரோதமாக தயாரித்து விற்கப்படும் சாராயம் காரணமாகவே இந்த பெரும் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த துயரச் சம்பவம் குவைத்தில் உள்ள வெளிநாட்டு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு அரசின் சார்பில் உதவி வழங்கப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
English Summary
kuwait toxic alcohol death rate increase