நாம் தமிழர் கட்சி யாருடன் கூட்டணி? சீமான் மீண்டும் அழுத்தமாக சொன்ன பதில்!
Naam Thamizhar Katchi Seeman TN Assembly Election Alliance
சென்னை வளசரவாக்கத்தில் அமைந்துள்ள நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. விழாவில் கட்சித் தலைவர் சீமான் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணரின் படத்திற்கு மலர் தூவி வணங்கினர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சீமான், நாம் தமிழர் கட்சி ஆரம்பம் முதலே தனித்து தேர்தல் களம் கண்டுவருகிறது என்றார். “எங்களிடம் ஒரே நிலைப்பாடு தான். அடுத்த சட்டமன்றத் தேர்தலையும் தனித்தே சந்திக்கப் போகிறோம்.
திமுகக்கு எதிரான வாக்குகள் சிதறுமா என கேட்கிறீர்கள்; ஆனால் நாங்கள் எங்கள் பலத்தை நம்பியே போட்டியிடுகிறோம். மக்களிடம் தூய்மையான அரசாங்கத்தை அமைப்போம் என்ற நம்பிக்கையோடு களம் காண்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.
பிரதமர் சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ். பற்றி புகழ்ந்தது புதிதல்ல என்றும், அதேசமயம் தற்சார்பு பொருளாதாரத்தை முன்னெடுப்பதாக கூறியிருப்பது நல்ல முன்னேற்றம் என்றும் சீமான் குறிப்பிட்டார். “அடுத்த 3½ ஆண்டுகளில் அதனை நிறைவேற்ற வேண்டும்” என்றார்.
தூய்மை பணியாளர் விவகாரத்தில் சென்னை மாநகராட்சி நாடகம் நடத்தி இருப்பது கண்டிக்கத்தக்கது என்றும், அனைத்தையும் தனியார் மயமாக்கும் போக்கு ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் வலியுறுத்தினார். “இதையெல்லாம் மாற்றுவதற்காகவே நாங்கள் களத்தில் இருக்கிறோம்; மாற்றத்தை கண்டிப்பாக கொண்டு வருவோம்” என சீமான் தெரிவித்தார்.
English Summary
Naam Thamizhar Katchi Seeman TN Assembly Election Alliance