சுதந்திர தின விழாவில் பங்கேற்காமல் இருப்பதா? கார்கே, ராகுல் காந்திக்கு கண்டனம்!
Isnt it shameful not to participate in the Independence Day celebration? Shame on Rahul Gandhi
செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை ராகுல் காந்தி , கார்கே புறக்கணித்து இருப்பது கண்டனத்துக்குரியது என்று பாஜக செய்தி தொடர்பாளரான ஷேஷாத் பூனவல்லா தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி நேற்று தேசியக்கொடி ஏற்றி வைத்து உரையாற்றினார். மத்திய அரசு சார்பில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்கவில்லை.
இந்திய சுதந்திர தினத்தையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்களும் நம் நாட்டுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.ஆனால் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பங்கேற்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான இருவருக்கும் பா.ஜ.க. கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து கட்சியின் செய்தி தொடர்பாளரான ஷேஷாத் பூனவல்லா கூறுகையில், ‘ இது ஒரு தேசிய கொண்டாட்டம். எந்த ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டமோ அல்லது எந்த கட்சியின் நிகழ்ச்சியோ அல்ல’ என சாடினார்.
செங்கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவை ராகுல் காந்தி ,கார்கே புறக்கணித்தது மூலம் காங்கிரஸ் கட்சி தன்னை இந்திய தேசிய காங்கிரஸ் என்று இல்லாமல், ‘இஸ்லாமாபாத் தேசிய காங்கிரஸ்’ அல்லது ‘இத்தாலி தேசிய காங்கிரஸ்’ என நிரூபித்திருப்பதாக குற்றம் சாட்டிய அவர், நாட்டின் ராணுவம், அரசியல் சாசனம், சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை அவமதித்துள்ளதாகவும் என்று அவர் தெரிவித்துள்ளார் .
English Summary
Isnt it shameful not to participate in the Independence Day celebration? Shame on Rahul Gandhi