ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பாப் சிம்சன் காலமானார்!
Former Australia captain and coach Bob Simpson passed away
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பாப் சிம்சன், 89 வயதில் காலமானார்.
1936ஆம் ஆண்டு சிட்னியில் பிறந்த இவர், தனது வாழ்நாள் முழுவதையும் கிரிக்கெட்டுக்கே அர்ப்பணித்தவர். முதல்தர கிரிக்கெட்டில் 257 போட்டிகளில் 21,029 ரன்கள் குவித்துள்ள சிம்சன், ஆஸ்திரேலிய தேசிய அணிக்காக 62 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,869 ரன்கள் எடுத்துள்ளார்.
திறமையான ஆல் ரவுண்டராக 71 விக்கெட்டுகளையும் பெற்றுள்ளார். கேப்டனாகவும், பின்னர் வர்ணனையாளராகவும், பயிற்சியாளராகவும் திகழ்ந்தார். கவுண்டி கிரிக்கெட்டிலும் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளார்.
அவர் தலைமையில் ஆஸ்திரேலிய அணி உலகக்கோப்பை வென்றது, ஆஷஸ் தொடரை தக்கவைத்தது, பிராங்க் வொரெல் தொடரில் வெற்றி பெற்றது உள்ளிட்டவை குறிப்பிடத்தக்க சாதனைகளாகும்.
அவரது மறைவுக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா தனது இரங்கலைத் தெரிவித்துள்ளது. “உண்மையான கிரிக்கெட் லெஜெண்ட் ஒருவர் காலமானார்.
டெஸ்ட் கிரிக்கெட்டர், கேப்டன், பயிற்சியாளர், தேசிய அணித் தேர்வாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்த சிம்சன், ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் மிகப்பெரிய நட்சத்திரம்.
அவரது முழு வாழ்க்கையும் கிரிக்கெட்டுக்கே அர்ப்பணிக்கப்பட்டது. பாப் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறோம்” என பதிவு வெளியிட்டுள்ளது.
பாப் சிம்சன் கிரிக்கெட் உலகில் அழியாத தடம் பதித்தவர் என அனைவரும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
English Summary
Former Australia captain and coach Bob Simpson passed away