தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சுதந்திர தின விழா கொண்டாட்டம்!
The National Welfare Association Independence Day Celebration
தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் சுதந்திர தின விழாவை தேசிய கொடியை ஏற்றி கொண்டாடினர்.
தி நேஷனல் வெல்ஃபர் அசோசியேஷன் அலுவலகத்தில் 79-வது சுதந்திர தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது, இந்த விழாவிற்கு அசோசியேஷன் தலைவர் கே.முஹம்மத் அயூப் தலைமை தாங்கினார்
அசோசியேஷன் நிர்வாகிகள் அ.முஹம்மத்தமீம், எச்.முஹம்மத் ஹாஷிம், யி.முஹம்மத்ஹலீம், வி.அன்சர், அஹ்மத், யி.முஹம்மத் உஸ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
அசோசியேஷன் துணைத் தலைவர் கே.முஹம்மத்இத்ரீஸ் வரவேற்புரையாற்றினார்.சிறப்பு விருந்தினராக My India 24x7 தொலைக்காட்சியின் தலைவர் ஜனாப் A.முக்தார்அஹ்மத் சாஹிப் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்தார்கள்.

சிறப்பு அழைப்பாளர்களாக மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்க துணைத் தலைவர் மற்றும் மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்க பொதுப் பள்ளி தாளாளர் ஆலிஜனாப், S.Z.இப்திகார், மற்றும் E2E நிறுவனத்தின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி ஆலிஜனாப், கே.இம்ரான், அஹ்மத்சாஹிப், ஆகியோர்கள் கலந்து கொண்டு கடந்த 20 நாட்களாக அசோசியேஷன் சார்பில் நடைபெற்ற புனித ஹஜ் பயணத்திற்கான விண்ணப்பத்தினை online-ல் விண்ணப்பித்து ஹஜ் பயனிகளுக்கு அரும்பணி ஆற்றிய ஜனாப் மின்னி முஹம்மத் அமீன், ஜனாப் வாவர்தார் உமர் அதாவுல்லா மற்றும் ஜனாப் K.O.முஹம்மத் சாகிப் சுலைமான் ஆகிய மூவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
அதனை தொடர்ந்து அசோசியேஷன் பொருளாளர் ஜி.முஹம்மத் பஹிம் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார்கள்அதனை தொடர்ந்து அசோசியேஷன் துணை செயலாளர் கே.ஓ.நிஷாத் அஹ்மத் அவர்கள் நன்றியுரையாற்றினார்.
English Summary
The National Welfare Association Independence Day Celebration