இளம்பெண் மூலம் Honey Trap: அதிமுக பிரமுகரை காரில் கடத்திய கும்பல்: நிர்வாணப்படுத்தி துப்பாக்கி முனையில் சித்திரவதை; போலீசார் வலைவீச்சு..! - Seithipunal
Seithipunal


அதிமுக பிரமுகர் ஒருவரை, இளம்பெண் மூலம் ஆசை வார்த்தை காட்டி காரில் கடத்தி பணம் கேட்டு சித்திரவதை செய்து, துப்பாக்கி முனையில் மிரட்டிய 04 பேரை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஒருவர் நிதிநிறுவனம் நடத்தி வருகிறார். இவர் முக்கிய திருவிழாக்கள், நிகழ்ச்சிகளின் போது தான் சார்ந்த கட்சி சார்பில் பெரிய அளவில் பேனர்களை வைத்து வருகிறார். 

அதன் பேனர்களில் அவரது படத்தை ஒரு ஓரத்தில் பெரிய அளவில் வைத்திருப்பதை பார்த்த திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நிதி நிறுவன வளர்ச்சிக்காக தனியார் நிறுவனத்தில் கடன் வாங்கி தருவதாக அவரை அணுகியுள்ளார். இதை நம்பிய அதிமுக பிரமுகரும் இளம்பெண்ணின் பேச்சில் மயங்கியுள்ளார். இதனால் அவரிடம் உல்லாசம் அனுபவிக்க திட்டமிட்டுள்ளார்.

தொடர்ந்து இளம்பெண்ணும், அதிமுக பிரமுகரும் செல்போனில் பேசி வந்துள்ளனர். பின்னர் இருவரும் தனிமையில் சந்திக்க முடிவு செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இளம்பெண் அவரை தூத்துக்குடி வரச்சொல்லியுள்ளார். இதையடுத்து அவர் பைக்கில் புறப்பட்டு சென்றுள்ளார்.

அப்போது, திருச்செந்தூர் பகுதியில் பைக் சென்றபோது சொகுசு காரில் வந்த 04 பேர் சேர்ந்த கும்பல் அவரை வழிமறித்து காரில் வலுக்கட்டாயமாக ஏற்றியுள்ளனர். அத்துடன், அவரது கண், கால், கைகளை கட்டி சிறிது தூர பயணத்திற்குப்பின் தேரிப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை துப்பாக்கி முனையில் நிர்வாணப்படுத்தி தேரி மணலில் தலை மட்டும் தெரியும் அளவிற்கு புதைத்து வைத்து தாக்கியுள்ளனர். 

அத்துடன், நிர்வாண நிலையில் செல்போனில் போட்டோ, வீடியோ எடுத்து மிரட்டியுள்ளனர். நீண்ட நேரம் அவரைத் தாக்கி ரூ.50 லட்சம் பணம் கொடு; கொடுக்காவிட்டால் இங்கேயே உன்னை சுட்டுக்கொல்வோம் என்றும், இல்லையெனில் நிர்வாண போட்டோக்கள் வெளியிடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் பதறிப்போன அவர் அவரது நண்பர்கள், தொழில் பழக்க வழக்கத்தில் உள்ளவர்களிடம் ரூ.50 லட்சம் அவசரமாக வேண்டும் என கேட்டுள்ளார். ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை. இதனால் கடுப்பான கடத்தல் கும்பல் மீண்டும் அவரை தாக்கிவிட்டு, அங்கேயே விட்டுவிட்டு செல்போன் உள்ளிட்ட கிடைத்ததை பறித்து சென்றுள்ளனர்.

இந்நிலையில் அதிமுக பிரமுகர் அவரது நண்பர் ஒருவரிடம் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட சம்பவம் குறித்து பேசிய ஆடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து குலசேகரன்பட்டினம், திருச்செந்தூர் போலீசார் அதிமுக பிரமுகரிடம், துப்பாக்கிமுனையில் கடத்திய நபர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police net the gang that kidnapped an AIADMK leader in a car and tortured him at gunpoint after being seduced by a young woman


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->